உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்ற நல் வாக்கிற்கிணங்க, நாள் 1-க்கு ரூ.1750/- வீதம் 50 பக்தர்களுக்கு தினசரி அன்னதானம் நடைபெறும். உபயமாகவோ, பணமாகவோ, அலுவலகத்தில் செலுத்தலாம். மேலும் இணைய வழியாகவும் செலுத்தலாம் ரூ.20000/- திருக்கோயில் பெயரில் வங்கியில் முதலீடு செய்து அதிலிருந்து வரும் வட்டியில் ஆண்டுக்கு ஒருநாள் உபயதாரர் பெயரில் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். ஆன்புள்ளம் கொண்டோர் அரிசி, மளிகை பொருள், காய்கறிகள், ஆகியவை அன்னதானத்திற்கு உபயமாக வழங்கலாம். திருக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள அன்னதானம் உண்டியலில் பக்தர்கள் தாராளமாக நிதி வழங்கி பக்தர்கள் பசியாற்றி இறையருள் பெறவேண்டுகின்றோம். தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் எனவே பிறந்தநாள், திருமண நாள், நினைவு நாள், முன்னிட்டு 50 பக்தர்களுக்கு அன்னமிட்டு அருள்மிகு ஆட்சீஸ்வரர் சுவாமி பேரருளை பெற அன்புடன் வேண்டுகின்றோம்.