Screen Reader Access     A-AA+
அருள்மிகு மகாமாரியம்மன் மற்றும் மகாசுந்தரகாளியம்மன் திருக்கோயில், தேப்பெருமாநல்லூர், திருவிடைமருதூர் - 612206, தஞ்சாவூர் .
Arulmigu Maha Mariyamman and Maha Sundara Kaliamman Temple, Thepperumanallur - 612206, Thanjavur District [TM018053]
×
-

  தினசரி திருக்கோயிலுக்கு வரும் 50 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானத் திட்டம் 15.08.2002 முதல் செயல்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்புவோர் ஒரு நாளைக்கு உண்டாகும் செலவிற்கு ரூ.1,750/- திருக்கோயிலில் செலுத்தி அன்னதான திட்டத்தில் கலந்து கொள்ளலாம் அல்லது ரூ.25,000/-முதலீடாக செலுத்தும் பட்சத்தில் அத்தொகையினை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கப் பெறும் வட்டியைக் கொண்டு வருடத்தில் பக்தர்கள் விரும்பும் ஏதாவது நாளில் மேற்படி அன்னதானம் செய்து கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது மாறுதலுக்குட்பட்டது. அன்னதான திட்டத்திற்கு பணம் செலுத்துவோர்க்கு 80 வருமான வரிவிலக்கு உண்டு. அன்னதானத்திற்கு அவரவர் விருப்பம் போல் பணம் செலுத்தலாம்.