இத்திருக்கோயிலில் தினந்தோறும் 100 நபர்களுக்கும், பிரதி வியாழன்தோறும் வடை பாயாசத்துடன் 200 நபர்களுக்கும் அன்னதானம் நடைபெற்று வருகிறது. தற்சமயம், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட சட்டமன்ற அறிவிப்பின்படி தினந்தோறும் 100 நபர்களுக்கும், பிரதி வியாழன்தோறும் வடை பாயாசத்துடன் 500 நபர்களுக்கும் அன்னதானம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.