இத்திருக்கோயிலில் அன்னதானத் திட்டம் 15.09.2015 முதல் நடைபெற்று வருகிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விஷேஷ நாட்களில் 50 நபர்களுக்கும் மற்ற கிழமைகளில் 25 நபர்களுக்கும் பகல் 12.00 மணியளவில் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருக்கோயிலில் அன்னதான நன்கொடை வழங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு விதி எண் 80(ஜி)-ன் கீழ் உண்டு.