கன்னியாக்குமரி பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திண்டுக்கல் நகரிலிருந்து கிழக்கே ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் தாடிக்கொம்பு என்னும் ஊரின் மேற்கில் குடகனாற்றின் மேற்குக்கரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அகரம் முத்தாலம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. அகரம் முத்தாலம்மன் ஒரு வேண்டுதல் தெய்வமாகும். இந்த ஆலயத்தின் கருவறையில் கற்சிலையால் செய்யப்பட்ட இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்னும் மூன்று திருவுருவமாக முத்தாலம்மன் சிலை வைக்கப்பட்டுள்ளது. அம்மன் கோயிலானது கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முகப்பு மண்டபம், சுற்றுப்பிரகாரம் என்ற அமைப்பில் விளங்குகிறது. சுற்றுப்பிரகாரத்தில் விநாயகர், சுரலிங்கேஸ்வரர், விசாலாட்சி, பாலமுருகன், மகாலெட்சுமி, துர்க்கை, நவக்கிரகங்கள் எனத் தனிச் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தின் தென்புறத்தில் இக்கோயிலின் காவல் தெய்வமாகிய பூதராஜாவும்,...