இத்திருக்கோயிலில் கடந்த 19.11.2011 தேதி முதல் அன்னதானத் திட்டம் தொடங்கப்பட்டு, நாள்தோறும் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் தற்பொழுது நாள் ஒன்றுக்கு 25 பயனாளிகள், சனிக்கிழமைகளில் 50 பயனாளிகள் உணவருந்தி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு இத்திட்டத்திற்கு 25 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கிட ரூ 875/ மற்றும் சனிக்கிழமையன்று 50 நபர்கள் வீதம் அன்னதானம் வழங்கிட ரூ 1750/ செலுத்தி பக்தர்கள் தாங்கள் விருப்பப்பட்ட நாட்களில் அன்னதானத்தில் பங்கு கொள்ளலாம். அன்னதானம் நன்கொடை செலுத்துபவர்களுக்கு வருமான வரி விலக்கு 80 ஜி உண்டு.