சென்னை தமிழ் வளர்ச்சி பண்பாடு மற்றும் அறநிலையத்துறை தலைமைச் செயலகம் அரசு கடிதம் எண்.8762/அநி11/2004-1, நாள்.16.06.2004 ஆணை மற்றும் சென்னை இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆணையர் ந.க.எண்.17776/2002 கே2, நாள்.10.08.2004 ஆணைப்படி ஐந்தாவது கட்ட அறிவிப்பாக இத்திருக்கோயிலில் தினசரி அன்னதானத் திட்டம் நடைபெறுகிறது. 1. அன்னதானத்திட்டம் துவங்கப்பட்ட நாள்.14.06.2004 2. அன்னதானம் வழங்கப்படும் நேரம் - பிற்பகல் 12.15 மணி. 3. அன்னதானம் பயனடையும் நபர்கள் - 100க்கும் குறைவில்லாமல். 4. வழங்கப்படும் உணவு வகைகள்- சாதம், சாம்பார், ரசம், மோர்,காய்கறி கூட்டு, காய்கறி பொரியல், ஊறுகாய் மற்றும் உபயதாரர் விருப்பப்படி அப்பளம் மற்றும் பாயாசம். 5. அன்னதானத் திட்டத்திற்கென இத்திருக்கோயிலில் அம்மன் சன்னதி ஆறு கால் மண்டபத்தில் உண்டியல் ஒன்று உள்ளது. 6. அன்னதானத் திட்டத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு இந்திய அரசின் வருமான வரித்துறை, மதுரை.சி.எண்.478/4 /சிஐடி -2 / 2007-2008 ஆணையின் படி வரிவிலக்கு உள்ளது. 7. அன்னதானத் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை(உணவு பாதுகாப்புப் பிரிவு) பதிவு எண்.22419514000083 ன் படி 09.04.2021 வரை உணவு தரச் சான்று பெறப்பட்டுள்ளது.