தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயில் சார்பாக தினந்தோறும் 50 நபர்களுக்கு மதியம் 12:30 மணியளவில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் செய்ய விரும்பும் பக்தர்கள் நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் செலுத்தி தாங்கள் விரும்பும் தினத்தன்று பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ரூபாய் 25000 செலுத்தி குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தாங்கள் விரும்பும் தினத்தன்று தங்களது சார்பாக அன்னதானம் 50 நபர்களுக்கு வழங்கப்படும். அன்னதானத்திற்கு நன்கொடை வழங்க விரும்ப பக்தர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் திருக்கோயில் வலைத்தளம் லிங்க் மூலமாகவும் அன்னதான நன்கொடை செலுத்தி அலுவலகத்தில் தெரிவித்துக் கொள்ளலாம். தங்கள் செலுத்தும் அன்னதான நன்கொடை தொகைக்கு இந்திய அரசின் வருமான வரி விலக்கு வழங்கப்பட்டுள்ளது.