அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர், தஞ்சாவூர் - 613501, தஞ்சாவூர் .
Arulmigu Marriamman Temple, Punnainallur, Thanjavur - 613501, Thanjavur District [TM014047]
×
Temple History
தல பெருமை
நாயக்கர்களுக்குப் பிறகு, தஞ்சை மராட்டிய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. ஏகோஜி மன்னரால் தோற்றம் பெற்றது. முதலாம் சரபோஜி மகாராஜா தன் சிறுவயது பெண்ணுக்குக் கண்ணில் இரத்தம் வடிவதைக் கண்டவுடன் சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டுதல் செய்தனர். அன்று இரவு மன்னர் தம் கனவில் தோன்றிய சமயபுரத்தாள் தான் தஞ்சைக்கு அருகில் புன்னை வனக்காட்டில் இருப்பதாகக் கூறினாள். மறுநாள் அரசர் புன்னை வனக்காடு சென்று தேடிப்பார்த்தபோது அங்கு ஒரு புற்று இருப்பதைக் கண்டார். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் அனுக்கிரஹத்தால் அப்புற்றே மஹாமாரியின் திருவடிவம் என்பதை உணர்ந்திட்ட பின்னர் அவதூதரான ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரின் கரத்தாலேயே யந்திர பிரதிஷ்டை செய்தும் அப்புற்று மண்ணாலேயே அம்பிகையின் திருவுருவமும் உருவாக்கப்பெற்றது.
...நாயக்கர்களுக்குப் பிறகு, தஞ்சை மராட்டிய அரசர்களின் ஆளுகைக்கு உட்பட்டது. ஏகோஜி மன்னரால் தோற்றம் பெற்றது. முதலாம் சரபோஜி மகாராஜா தன் சிறுவயது பெண்ணுக்குக் கண்ணில் இரத்தம் வடிவதைக் கண்டவுடன் சமயபுரம் மாரியம்மனுக்கு வேண்டுதல் செய்தனர். அன்று இரவு மன்னர் தம் கனவில் தோன்றிய சமயபுரத்தாள் தான் தஞ்சைக்கு அருகில் புன்னை வனக்காட்டில் இருப்பதாகக் கூறினாள். மறுநாள் அரசர் புன்னை வனக்காடு சென்று தேடிப்பார்த்தபோது அங்கு ஒரு புற்று இருப்பதைக் கண்டார். ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரரின் அனுக்கிரஹத்தால் அப்புற்றே மஹாமாரியின் திருவடிவம் என்பதை உணர்ந்திட்ட பின்னர் அவதூதரான ஸ்ரீ சதாசிவ பிரமேந்திரரின் கரத்தாலேயே யந்திர பிரதிஷ்டை செய்தும் அப்புற்று மண்ணாலேயே அம்பிகையின் திருவுருவமும் உருவாக்கப்பெற்றது.
முதலாம் சரபோஜி, துக்கோஜி என்னும் துளஜா ஆகிய சகோதரர்கள் தஞ்சையை ஆட்சி செய்த காலத்தில் (கி.பி.1712-1733) தங்களால் கற்றளியாக எடுக்கப்பெற்ற இவ்வாலயத்திற்கு அளப்பரிய கொடைகள் நல்கினர். கி.பி.1739-1763 வரை தஞ்சை மராட்டிய அரசராகத் திகழ்ந்த பிரதாபசிம்மன், அருள்மொழிப்பேட்டை எனும் கிராமத்தில் 253 ஏக்கர் 48 சென்ட் (33 வேலி 7 மா) இக்கோயிலுக்கு மானியமாக வழங்கினார்.
இரண்டாம் சரபோஜி தன் ஆட்சிக் காலத்தில் (கி.பி.1798- 1832) இத்திருக்கோயிலின் மகாமண்டபம், நர்த்தன மண்டபம், முன் கோபுரம், பெரிய திருச்சுற்று முதலியவற்றைக் கட்டுவிதது மகாகும்பாபிஷேகத்தையும் சிறப்புற நடத்திவைத்தார்.
இரண்டாம் சரபோஜி மன்னரின் மறைவிற்குப் பிறகு அவர் மகன் சிவாஜி ராஜா இத்திருக்கோயிலின் முன் மண்டபம், மூன்றாம் திருச்சுற்று ஆகியவற்றைக் கட்டுவித்தார். இவருடைய பட்டத்து ராணியாக விளங்கிய காமாட்சிபாய் சாகேப் கி.பி.1892 இல் வெளிமண்டபத்தையும், உணவுச்சாலையையும் கட்டுவித்தார். சரபோஜி ராஜாசாகேப் சத்ரபதி மூத்த இளவரசர் பொறுப்பு வகித்த காலத்தில் பக்தர்கள் இளைப்பாறுவதற்காக ஆலயத்தின் முன்புறம் உலோகத்தகடு வேய்ந்த கொட்டகை ஒன்றை அமைத்ததோடு அம்பிகைக்கு விலை உயர்ந்த ஆபரணங்களையும் பட்டாடைகளையும் வழங்கினார்.
அப்போதைய மூத்த இளவரசரும் பரம்பரை அறங்காவலருமாக விளங்கிய இராஜஸ்ரீ ராஜாராம்ராஜாசாகேப் அவர்கள் பொதுமக்கள் உதவியுடன் 3.7.1950-ல் குடமுழுக்கு விழாவை இனிதே நடத்தினார்.