அருள்மிகு மத்தியபுரீஸ்வரர் (பொதுஆவுடையார்) திருக்கோயில், பரக்கலக்கோட்டை,பட்டுக்கோட்டை - 614613, தஞ்சாவூர் .
Arulmigu Mathiyapurieswarar Temple, Parakkalakkottai - 614613, Thanjavur District [TM014059]
×
Temple History
தல வரலாறு
இல்லறமே சிறந்ததென ஸ்ரீவானுகோபரும் துறவறமே சிறந்ததென ஸ்ரீமகாகோபரும் வாதிட்டதினைக் கேட்ட இறைவன் இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவைதான். ஒன்றுக்கொன்று உயர்வு, தாழ்வு உடையவையல்ல என்று மத்தியஸ்தம் செய்து வைத்ததால் ஸ்ரீ மத்தியபுரீஸ்வரர் என்று வாய்மொழியிலும், முனிவர் இருவருக்கும் பொதுவாக இருந்து உண்மைப் பொருளை உணர்த்தியதால் அருள்மிகு பொது ஆவுடையார் என்று அமுதத் தமிழிலும் அழைக்கப் பெற்று,, பெருமையுடன் இத்திருத்தலத்தின் பாமர மக்களுக்கும் பொதுவுடையராக அரூபமாய் இருந்து அருள்பாலித்து வருகிறார்.இல்லறமே சிறந்ததென ஸ்ரீவானுகோபரும் துறவறமே சிறந்ததென ஸ்ரீமகாகோபரும் வாதிட்டதினைக் கேட்ட இறைவன் இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவைதான். ஒன்றுக்கொன்று உயர்வு, தாழ்வு உடையவையல்ல என்று மத்தியஸ்தம் செய்து வைத்ததால் ஸ்ரீ மத்தியபுரீஸ்வரர் என்று வாய்மொழியிலும், முனிவர் இருவருக்கும் பொதுவாக இருந்து உண்மைப் பொருளை உணர்த்தியதால் அருள்மிகு பொது ஆவுடையார் என்று அமுதத் தமிழிலும் அழைக்கப் பெற்று,, பெருமையுடன் இத்திருத்தலத்தின் பாமர மக்களுக்கும் பொதுவுடையராக அரூபமாய் இருந்து அருள்பாலித்து வருகிறார்.
தல பெருமை
சித்தமெல்லாம் சிவன்பால் வைத்த ஸ்ரீ வானுகோபர், ஸ்ரீ மகாகோபர் என்ற அருமை முனிவர் இருவருக்கிடையே எழுந்த இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்ற வழக்கை தீர்த்து வைக்க திருவுளம் கொண்ட ஈசன், பிரதாப சிதம்பரம், தென் சிதம்பரம், என்றெல்லாம் பெருமை பெற்ற பரக்கலக்கோட்டை என்னும் இத்திருத்தலத்தில் உள்ள ஒரு வெள்ளால மரத்தில் சோமவார தினமென்றில் இரவு இரண்டாவது சாமத்தில் தோன்றி திவ்விய தரிசனம் தந்தருளியுள்ளார்.
இல்லறமே சிறந்ததென ஸ்ரீ வானகோபரும், துறவமே சிறந்ததென ஸ்ரீ மகாகோபரும் வாதிட்டதினை கேட்ட இறைவன் , இல்லறம், துறவறம்...சித்தமெல்லாம் சிவன்பால் வைத்த ஸ்ரீ வானுகோபர், ஸ்ரீ மகாகோபர் என்ற அருமை முனிவர் இருவருக்கிடையே எழுந்த இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்ற வழக்கை தீர்த்து வைக்க திருவுளம் கொண்ட ஈசன், பிரதாப சிதம்பரம், தென் சிதம்பரம், என்றெல்லாம் பெருமை பெற்ற பரக்கலக்கோட்டை என்னும் இத்திருத்தலத்தில் உள்ள ஒரு வெள்ளால மரத்தில் சோமவார தினமென்றில் இரவு இரண்டாவது சாமத்தில் தோன்றி திவ்விய தரிசனம் தந்தருளியுள்ளார்.
இல்லறமே சிறந்ததென ஸ்ரீ வானகோபரும், துறவமே சிறந்ததென ஸ்ரீ மகாகோபரும் வாதிட்டதினை கேட்ட இறைவன் , இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவைதான், ஒன்றுக்கொன்று உயர்வு, தாழ்வு உடையதல்ல என்று மத்தியஸ்தம் செய்து வைத்ததால் ஸ்ரீ மத்தியபுரீஸ்வரர் என்றும் முனிவர் இருவரும் பொதுவாக இருந்து உண்மைப் பொருளை உணர்த்தியதால் அருள்மிகு பொதுஆவுடையார் என்று அமுதத் தமிழிலும் அழைக்கப்பெற்றுவருகிறது.