இல்லறமே சிறந்ததென ஸ்ரீவானுகோபரும் துறவறமே சிறந்ததென ஸ்ரீமகாகோபரும் வாதிட்டதினைக் கேட்ட இறைவன் இல்லறம், துறவறம் இரண்டுமே சிறந்தவைதான். ஒன்றுக்கொன்று உயர்வு, தாழ்வு உடையவையல்ல என்று மத்தியஸ்தம் செய்து வைத்ததால் ஸ்ரீ மத்தியபுரீஸ்வரர் என்று வாய்மொழியிலும், முனிவர் இருவருக்கும் பொதுவாக இருந்து உண்மைப் பொருளை உணர்த்தியதால் அருள்மிகு பொது ஆவுடையார் என்று அமுதத் தமிழிலும் அழைக்கப் பெற்று,, பெருமையுடன் இத்திருத்தலத்தின் பாமர மக்களுக்கும் பொதுவுடையராக அரூபமாய் இருந்து அருள்பாலித்து வருகிறார்.