Screen Reader Access     A-AA+
அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயில், திருவாரூர், திருவாரூர் - 610003, தி௫வாரூர் .
Arulmigu Thiyagaraswamy Temple, Thiruvarur - 610003, Thiruvarur District [TM014254]
×
Temple History

தல வரலாறு

திருமால் தனக்கு ஒரு அழகிய மகன் வேண்டுமென்று விரும்பினார். குறையெல்லாம் நிறைவிக்கும் பெருமானிடம் வேண்டிக் கடுந்தவம் மேற்கொண்டார். வெயிலிலும், மழையிலும் பெரிய நீலமலை போல அசையாது நின்று கடுந்தவஞ் செய்தார். அதன் பயனாக இறைவன் திருவருட்சக்தியோடு வெளிப்பட்டார். கண்ட திருமால் துண்ணெனத் திடுக்கிட்டு இறைவா வேண்டுவோர்க்கு வேண்டுவதேயீயும் விண்ணவர் தலைவ, அடியேனும் தேவரீர் திருவருளால் உலகப் பாதுகாப்பு முதலிய எல்லா நன்மைகளையும் எய்தினேன். ஆயினும் பிள்ளையில்லாக் குறை பெரிதாயிற்று. அதனைத் தீர்க்க அழகிய புத்திர பாக்கியத்தை அருளுதல் வேண்டும் என்றார். பெருமானும் பேரருள் கூர்ந்தார். ஆனால், திருமால் இடப்பக்கத்து இருக்கின்ற உமாதேவியை வணங்கவில்லை. அதனால் உமாதேவியார் சிறிது சினங்கொண்டு இறைவன் திருவருளால் நீ புத்திரனை யெய்தினும் அவன் விதிவலியால் வலிய அழிக என்று...