Arulmigu Kandaswamy Temple, Thiruporur - 603110, Chengalpattu District [TM001734]
×
Temple History
இலக்கிய பின்புலம்
தொண்டை நாட்டில் அமையப்பெற்றுள்ள, திருப்போரூர் எனும் தொன்மையான, இத்தலம் அறுபடை வீடுகளுக்கு ஒப்பான புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்தலம் சமரபுரி, போரியூர், யுத்தபுரி, செருவூர், போரிநகர், சமரப்பதி எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மீனாட்சியம்மன் அருள்பெற்ற தவஞானி சிதம்பரசுவாமிகள், பனங்காடாய் கிடந்த இப்பகுதியில் இத்திருக்கோயிலை நிர்மாணித்துள்ளார். இத்திருக்கோயிலின் அருகில் இருந்த வள்ளையார் ஓடை திருக்குளமாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இக்குளம் வற்றாத பெருமையுடையது. அருகில் உள்ள கண்ணுவர்ப்பேட்டையில் சிதம்பர சுவாமிகள் திருமடம் உள்ளது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள் திருப்போரூர் சந்நிதி முறை என போற்றப்படுகிறது.
தலச்சிறப்பு :- அருள்மிகு கந்தசுவாமி, வள்ளி, தெய்வானை மூலவர்கள் மூவரும் சுயம்பு வடிவினர். மூலவருக்கு அபிஷேகம் எதுவும் நடைபெறுவதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.
மூலவர்...தொண்டை நாட்டில் அமையப்பெற்றுள்ள, திருப்போரூர் எனும் தொன்மையான, இத்தலம் அறுபடை வீடுகளுக்கு ஒப்பான புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்தலம் சமரபுரி, போரியூர், யுத்தபுரி, செருவூர், போரிநகர், சமரப்பதி எனப் பல பெயர்களால் குறிப்பிடப்படுகிறது.
17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில், மீனாட்சியம்மன் அருள்பெற்ற தவஞானி சிதம்பரசுவாமிகள், பனங்காடாய் கிடந்த இப்பகுதியில் இத்திருக்கோயிலை நிர்மாணித்துள்ளார். இத்திருக்கோயிலின் அருகில் இருந்த வள்ளையார் ஓடை திருக்குளமாகத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இக்குளம் வற்றாத பெருமையுடையது. அருகில் உள்ள கண்ணுவர்ப்பேட்டையில் சிதம்பர சுவாமிகள் திருமடம் உள்ளது. சிதம்பரசுவாமிகள் இத்திருக்கோயில் முருகர் மீது பாடிய 726 பாடல்கள் திருப்போரூர் சந்நிதி முறை என போற்றப்படுகிறது.
தலச்சிறப்பு :- அருள்மிகு கந்தசுவாமி, வள்ளி, தெய்வானை மூலவர்கள் மூவரும் சுயம்பு வடிவினர். மூலவருக்கு அபிஷேகம் எதுவும் நடைபெறுவதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சாற்றப்படுகிறது.
மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. மூலவர் சந்நிதியில் , அபிஷேக ஆராதனை செய்யப்படுவதற்காக, வள்ளி, தெய்வானை, முருகன் சிலைகள் சிறிய வடிவில் ஒரு பீடத்தில் ஆதிகுரு சிதம்பரசுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீசக்கரஸ்தாபனம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் ஒன்றும் தவஞானி சிதம்பரசுவாமிகளால் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. திருப்போரூரில் இந்த ஸ்ரீசக்கரத்திற்குச் செய்யப்படும் வழிபாடு சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சிறப்பம்சங்கள்:- இத்திருக்கோயில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூவகை சிறப்பும் பெற்றது.
தலவிருட்சம் : வன்னிமரம் ( குழந்தைப்பேறு இல்லாதவர்கள் வன்னிமரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொள்கின்றனர் )