அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், பட்டீஸ்வரம், பட்டீஸ்வரம் - 612703, தஞ்சாவூர் .
Arulmigu Dhenupureeswarar Temple, Patteswaram, Patteeswaram - 612703, Thanjavur District [TM018013]
×
Temple History
தல வரலாறு
வரலாற்று நிகழ்வுகள்
பிற்கால சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராகப் பழையாறை மாநகர் விளங்கியது. அரசலாற்றுக்கு தெற்கும், முடிகொண்டான் ஆற்றுக்கு வடக்கும், வளம்பொருந்திய இந்நகர் சுமார் 5 மைல் நீளமும், 3 மைல் அகலமும் உள்ள பெரிய நகராகும். இன்று இந்நகர் நாதன்கோவில், உடையாளூர், கீழப்பழையார், மேலப்பழையார், முழையூர், பட்டீச்சுரம், திருச்சக்திமுற்றம், சோழன்மாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், திருமேற்றளிகை, கோபிநாத பெருமாள் கோயில், சுந்தரபெருமாள் கோயில், இராசராசேந்திரன்பேட்டை, தாராசுரம் எனப் பல சிற்றூர்களாகப் பிரிந்துள்ளன.
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளம்பொருந்திய இந்நகர் முதலாம் மகேந்திரவர்மனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. பிற்கால சோழர்கள், பல்லவர்களுக்கு திரைசெலுத்தக்கூடிய குறுநில மன்னர்களாக இருந்தனர்.
இரண்டாம் நந்திவர்மன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறையில் ஓர் அரண்மனையும், நந்திபுர விண்ணகரம் என்னும்...வரலாற்று நிகழ்வுகள்
பிற்கால சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராகப் பழையாறை மாநகர் விளங்கியது. அரசலாற்றுக்கு தெற்கும், முடிகொண்டான் ஆற்றுக்கு வடக்கும், வளம்பொருந்திய இந்நகர் சுமார் 5 மைல் நீளமும், 3 மைல் அகலமும் உள்ள பெரிய நகராகும். இன்று இந்நகர் நாதன்கோவில், உடையாளூர், கீழப்பழையார், மேலப்பழையார், முழையூர், பட்டீச்சுரம், திருச்சக்திமுற்றம், சோழன்மாளிகை, அரிச்சந்திரபுரம், ஆரியப்படையூர், பம்பைப்படையூர், புதுப்படையூர், மணப்படையூர், திருமேற்றளிகை, கோபிநாத பெருமாள் கோயில், சுந்தரபெருமாள் கோயில், இராசராசேந்திரன்பேட்டை, தாராசுரம் எனப் பல சிற்றூர்களாகப் பிரிந்துள்ளன.
கி.பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வளம்பொருந்திய இந்நகர் முதலாம் மகேந்திரவர்மனின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. பிற்கால சோழர்கள், பல்லவர்களுக்கு திரைசெலுத்தக்கூடிய குறுநில மன்னர்களாக இருந்தனர்.
இரண்டாம் நந்திவர்மன் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பழையாறையில் ஓர் அரண்மனையும், நந்திபுர விண்ணகரம் என்னும் திருமால் கோயிலையும் கட்டி இந்நகரை மாமல்லபுரம், காஞ்சி மாநகருக்கு இணையாகச் சிறந்த நகராக வைத்துக் கொண்டான். தெள்ளாறெரிந்த நந்திவர்மன் காலத்தில் பழையாறை என்னும் இந்நகரில் அடிக்கடிப் போர்கள் நிகழ்ந்தன. இவற்றுள் குடமூக்கு போர், இடவைப்போர், திருப்புறம்பியம் போர் சிறப்பு வாய்ந்தது.
விஜயாலயச் சோழனின் முன்னோர்கள் பழையாறையில் வாழ்ந்திருந்தனர். திருப்புறம்பியம் போருக்குப் பின்னரே தஞ்சை சோழர்களின் தலைநகராயிற்று. தஞ்சை தலைநகராக விளங்கிய பின்னரும் சோழ அரச குடும்பத்தினர் பழையாறையில் இருந்தனர். இரண்டாம் பராந்தகன் என்னும் சுந்தரச்சோழன் கி.பி. 10 ஆம் நூற்றாண்டளவில் இந்நகரில் அரசாண்டான்.
முதலாம் இராசராசசோழனின் தமக்கை குந்தவைப்பிராட்டியார் தஞ்சையில் கி.பி.1015-இல் சுந்தரச்சோழ விண்ணகர் ஆதுரச்சாலை என்னும் மருத்துவ நிலையம் ஒன்றினை நிறுவி, மருத்துவபோகமாக நிலமும் பொருளும் அளித்த உத்தரவை பழையாறையில் உள்ள அரண்மனையிலிருந்து பிறப்பித்தார்.
கி.பி.1019-இல் முதல் இராசேந்திரசோழன் கங்கை கொண்ட சோழபுரம் என்ற நகரினை அமைப்பதற்கு முன்னர் பழையாறை நகருக்கு முடிகொண்ட சோழபுரம் என்று பெயரிட்டு இங்கிருந்தே அரசாண்டான் என்பதை கல்வெட்டுகள் கூறுகின்றன. முடிகொண்டான் என்னும் பேராற்றை இவ்வரசனே வெட்டுவித்தான். இதனை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன.
கி.பி. 1112-இல் முதற் குலோத்துங்க சோழன் இந்நகரில் அரண்மனை வாணாதிராசன் என்ற சிங்காசனத்தில் வீற்றிருந்து தேவதானங்களை வழங்கினான். இவ்வுத்தரவு அம்பர் மாகாளத்தில் வரையப்பட்டுள்ளது. விக்கிரமச்சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராசராசன் ஆகிய மூவேந்தர் காலத்தில் வாழ்ந்த ஒட்டக்கூத்தர் இந்நகரை இராசராசபுரி (இராசராசபுரம்) என்று குறிப்பிடுகின்றார்.
13-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மூன்றாம் இராசராசச்சோழனை வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிய முதல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டில் முடிகொண்ட சோழபுரத்தில் விசயாபிடேகம் (விஜயாபிஷேகம்), வீரபாபிடேகம்(வீராபிஷேகம்), செய்து கொண்டான். அடைக்கலம் வேண்டிய மூன்றாம் இராசராசனுக்கு முடிகொண்ட சோழபுரத்தையும் சோழநாட்டையும் வழங்கினான்.
கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் பதினான்காம் நூற்றாண்டு வரையில் இம்மாநகர், பழையாறை, நந்திபுர முடிகொண்ட சோழபுரம், இராசராசபுரம் என்னும் பெயர்களைச் சில வேந்தர்களின் ஆட்சிக் காலத்தில் பெற்று 2-ஆவது தலைநகராகச் சிறப்புடன் விளங்கியது. சோழர்கள் முடிசூட்டிக் கொள்ளும் நகரங்களுள் ஒன்றாகவும் சிறந்திருந்தது.
தல பெருமை
பராசக்தி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தல்
பராசக்தி உலக உயிர்திரளின் நலன் வேண்டியும், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களின் தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் ஒற்றைகாலில் நின்று தவம் செய்த தலம். மற்ற திருத்தலங்களில் இல்லாத வகையில் சூரியனை நோக்கியே அனைத்து கிரகங்களும் பார்த்திருக்கும் அதிஅதிசயம் வாய்ந்த நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.
காமதேனு பூஜித்தல்
தேவலோகப் பசுவான காமதேனு விரும்பி உறைந்த தலங்களுள் இதுவும் ஒன்று. இத்தலத்து இறைவனுக்கு காமதேனு சிவபூஜை செய்து, கேட்டவருக்கு கேட்டதைக் கொடுக்கும் வரம் பல பெற்றது. ஆகவே, இவ்வூர் தேனுபுரி என்றும், சுவாமி தேனுபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த க்ஷேத்திரத்திலுள்ள சுவாமியிடத்தில் யாரெல்லாம் எதையெல்லாம்...பராசக்தி ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தல்
பராசக்தி உலக உயிர்திரளின் நலன் வேண்டியும், தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நவக்கிரகங்களின் தாக்கம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் ஒற்றைகாலில் நின்று தவம் செய்த தலம். மற்ற திருத்தலங்களில் இல்லாத வகையில் சூரியனை நோக்கியே அனைத்து கிரகங்களும் பார்த்திருக்கும் அதிஅதிசயம் வாய்ந்த நவக்கிரகங்கள் அமைந்துள்ளன.
காமதேனு பூஜித்தல்
தேவலோகப் பசுவான காமதேனு விரும்பி உறைந்த தலங்களுள் இதுவும் ஒன்று. இத்தலத்து இறைவனுக்கு காமதேனு சிவபூஜை செய்து, கேட்டவருக்கு கேட்டதைக் கொடுக்கும் வரம் பல பெற்றது. ஆகவே, இவ்வூர் தேனுபுரி என்றும், சுவாமி தேனுபுரீஸ்வரர் என்றும் போற்றப்படுகிறார்.
இந்த க்ஷேத்திரத்திலுள்ள சுவாமியிடத்தில் யாரெல்லாம் எதையெல்லாம் வேண்டுமென்று பிரார்த்தனை செய்கின்றார்களோ அதையெல்லாம் சுவாமி உடனே வழங்குகிறார் என்பது கண்கண்ட உண்மை.
திருஞானசம்பந்தருக்கு முத்துப்பந்தல் அளித்தது
திருஞானசம்பந்தர் திருவலஞ்சுழியை வணங்கி பழையாறை பதியை வணங்குவதற்கு அடியார்களுடன் நடந்து சென்று வழியிலுள்ள ஆறை மேற்றளி தலத்தை வணங்கிய பின் தேவியார் வழிபட்ட திருசக்திமுற்றத்திற்கு வந்து பெருமானை வழிபட்டார். பிறகு பக்கத்திலுள்ள பட்டீச்சுரம் சென்று வணங்குவதற்கு அடியார்களுடன் புறப்பட்டார். அப்போது சூரியன் மிதுன ராசியிற் பிரவேசிக்கின்ற முதுவேனிற் காலமானதால் வெய்யிலின் கொடிய வெப்பத்தை தணிக்க பட்டீச்சுர பெருமான் திருஞானசம்பந்தருக்கு பூதகணங்கள் மூலமாய் அழகிய முத்துப்பந்தலை அனுப்பி வைத்தார்.திருஞானசம்பந்தருக்கு தெரியாதபடி அவரது திருமுடிக்கு மேல் பிடித்துப் பெருமான் அருளியதையும் கூறினர். சம்பந்தர் இறைவனின் திருவருளை வியந்து பணிந்து போற்றி முத்துப்பந்தலின் நிழலின் வந்தார்.
இராமபிரான் பட்டீச்சுரரை வழிபடுதல்
இத்தலத்தில் இராமன் பிரதிஷ்டை செய்த லிங்கம் இராமலிங்கம் என்று அழைக்கப்படுகிறது. சாயை (பெருமை)உடைய இராவணனை வதம் செய்ததால் இராமனுக்கு சாயஹத்தி என்ற மூன்றாவது தோஷம் உண்டாயிற்று. அதனை நீக்குவதற்காக பட்டீச்சுரத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டார்