கோயில் நகரமாம் கும்பகோணத்திற்கு தென்மேற்கே 8 கிலோமீட்டர் தொலைவில் பட்டீச்சுரம் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சிவத்தல வரிசையில் காவிரியின் தென்கரையில் அமைந்த 23வது திருத்தலமாகும். நான்கு வாயில்களிலும் கோபுரங்கள் உள்ளன. இராஜ கோபுரம் ஏழு நிலைகளை உடையது. இரண்டாம் கோபுர வலப்புறம் ஆக்ஞா கணபதி சன்னதி உள்ளது. இரண்டாம் கோபுரத்தைக் கடந்து செல்லும் முன் அதிகார நந்திதேவரின் உத்தரவு பெற்று உள்ளே சென்றால் விலகிய நந்தியைக் காணலாம். கோயில் வாயிலில் உள்ள அலங்கார மண்டபம் மிகவும் அழகாகவும், பெரிதாகவும் உள்ளது. இம்மண்டபத்தில் காலசம்ஹாரர், அகோரவீரபத்திரர், வில்லேந்திய வேலவர், மன்மதன் முதலானோர், சம்ஹார வடிவிலும் பணிப்பெண்டீர், ஆடல்மகளீர் முதலான உருவங்கள் இம்மண்டபத்திற்கு அழகு சேர்க்கின்றன.உள்ளே சென்றால் பெரிய மண்டபம், பிச்சாடனர், சந்திரசேகரர், அர்த்தநாரீஸ்வரர் முதலான...