Screen Reader Access     A-AA+
அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில், Town Hall, Coimbatore - 641001, கோயம்புத்தூர் .
Arulmigu Koniamman Temple, Town Hall, Coimbatore - 641001, Coimbatore District [TM009765]
×
Temple History

தல வரலாறு

அருள்மிகு கோனியம்மன் திருக்கோயில் வரலாறு கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான். ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியில்லாமல் தவித்தனர்/ அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ் வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான். அதன்பிறகு கொங்கு நாட்டு...