இத்திருக்கோயில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பழமையான அம்மன் திருக்கோயிலாகும். சுயம்பு மூர்த்தியாக மிகவும் சக்தியுடன் எழுந்தருளியுள்ள அங்காளம்மனை திருமணத்தில் தடை உள்ளவர்களும், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பத்தில் பிரச்சனை உள்ளவர்களும், செல்வ வளம் விருப்புபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், சர்ப்பம் மற்றும் பிற தோஷம் உள்ளவர்களும் மனதார வழிபட்டு வந்தால் வேண்டியது கிடைக்கும் அங்காளம்மனை குல தெய்வமாக வழிபடுபவர்கள் தங்களது முதல் குழந்தைக்கு முத்தம்மாள், முத்துசாமி என்று பெயர் சூட்டுகிறார்கள், அம்மனின் அருளால் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் தலைக்கட்டு பொங்கல் வைத்து, முடி காணிக்கை செலுத்தி, காது குத்தி தங்களது நன்றிக் கடனை செலுத்துகிறார்கள். இத்திருக்கோயில் அம்பிகை பல குலத்தவர்களுக்கு குல தெய்வமாக இருந்து வருகிறார்.இத்திருக்கோயிலில் நாள்தோறும் 50 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு...