கொங்கு நாடு, தமிழகத்தின் சிறப்பான பகுதிகளில் ஒன்று. முல்லையும், குறிஞ்சியும், விரவிக் கிடக்கும் புண்ணிய பூமி இது. இங்கே உள்ள சிவத்தலங்களில் சிறந்தது அவிநாசி சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடி தோய்ந்த தலம், அவரது அற்புதச் செயலான முதலையுண்ட மழலையை மீட்ட தலம், காசியில் வாசி என்று போற்றப்படுவதும், அன்னை கருணாம்பிகை ஈசனின் வலம்புறத்தில் இருந்து அருள்பாலிக்கும் திருத்தலமும் இதுவே ஆகும், ஊழிக்காலத்தில் சிவபெருமான் சங்காரத் தாண்டவம் என்னும் பிரளயத் தாண்டவத்தைச் செய்து, பின் அக்கினித் தாண்டவம் என்னும் சுத்த சங்காரத் தாண்டவம் ஆட முற்படும்போது, உமாதேவியாரைப் பிரிந்து இருக்க ஆணையிட்டு, அக்கினித் தாண்டவத்தை முடித்து அம்மையாரின் பிரிவாற்றாமையைக் கண்டு அவரைத் தம் இடப்பாகத்திலே அமர்த்திக்கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்...