ஈரோடு மாவட்டம் தலையநல்லூரில் பொன்காளியம்மன் ஆலயம் உள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் அம்மன் வேண்டுவோருக்கு வேண்டிய வரங்களை கொடுத்து வளமான வாழ்க்கையை வழங்குபவளாக திகழ்கிறாள்.இந்த ஆலயத்தில் சிற்ப சாஸ்த்திர முறைப்படி கருவறை அர்த்த மண்டபம் மகா மண்டபம் பூத மண்டபம் நிருத்த மண்டபம் ராஜ மண்டபம் அமைந்துள்ளன. மேலும் வானளாவிய விமானத்துடன் சக பரிவார தெய்வங்களாகிய விநாயகர் மாதேஸ்வரன் வண்ணார கருப்பணன் சாமி பரிவார மூர்த்திகள் பாம்பாட்டி சித்தர் ஆகிய தெய்வங்களும் இங்கு அருளாட்சி செய்கிறார்கள்.இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன் தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும் காதில் தோடாக ராகுகேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம் டமருகம் கட்கம் கேடயம் பட்சி கிண்ணம் கண்டம்...