சுமார் 200 வருடங்கள் பழைமையான திருக்கோயில் அம்மன் வடக்கு முகமாக அமர்ந்த நிலையில் மக்களுக்கு வரம் தருகிறார். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், பெருந்துறை பேருந்து நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் குன்னத்தூர் செல்லும் சாலையில் சுள்ளிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது. துடுப்பதி பாலக்கரை, சுள்ளிப்பாளையம், மூன்று கிராமங்களும் சங்கமிக்கும் இடத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. திருக்கோயில் சிறப்பு வேண்டுவோருக்கு வேண்டும் அருளும் அம்மனை தேடி வருபவர்களுக்கு பில்லி, சூனியம் போன்ற தடைகளை நீக்கி திருமண பாக்கியம் குழந்தை பாக்கியம், போன்ற அநேக சிறப்புக்களை அருள்கிறார். துடுப்பதி பாலக்கரை, சுள்ளிப்பாளையம், மூன்று கிராமங்களும் சங்கமிக்கும் இடத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது தனிச்சிறப்பாகும். திருவிழாக்கள் சித்திரை மாதம் 8 நாட்கள் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி சிறப்பாக நடைபெறுகிறது. பிரதிமாதம்...