ஈரோடு மாவட்டம் ஈரோடு வட்டம் கனகபுரத்தில் மலைப்பாறை என்னும் கிராமத்தில் அருள்மிகு கனககிரி குமரவேல்சாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் மலைப்பகுதியில் ஒரு சிறு கல் கோவிலாக அமைந்துள்ளது. இத்திருக்கோயில் பல ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக தெரிய வருகிறது. காளிங்கராயன் பிறந்த ஊர் கனகபுரம். இந்த கிராமத்தில் முருகன் கோபித்துக்கொண்டு வந்த குகை இருந்த இடம் கனககிரி என்று அழைக்கப்படுகிறது. இந்த குகையில் உள்ள பாறையில் இருந்து நீருற்று வந்து கொண்டு இருக்கும். இந்தப் பாறையில் குழந்தையின் கால்தடம் யானையின் கால் தடம் பதிந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த கனககிரி மலையில் இருந்து பார்த்தால் சென்னிமலை ஊர் தெரிவதாக அமைந்துள்ளது. இத்திருக்கோயிலுக்கு வரலாற்று சிறப்புகள் பற்றிய குறிப்புகள் மற்றும்...