அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம் கருவல் வாடிபுதூரில் அமைந்துள்ளது.அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயிலில் மூலவர் ரங்கநாத பெருமாள் மற்றும் தாயார் ஸ்ரீதேவி பூதேவி ஆகியோருடன் காட்சியளிக்கிறார். இத்திருக்கோயிலில் புரட்டாசி மாதம் மற்றும் மார்கழி மாதம் விழாக்கள் நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆஞ்சநேயர் சிலை 32 அடி உயரத்தில் அமைய பெற்றுள்ளது. இக்கோயிலின் சிறப்பு ஆஞ்சநேயருக்கு எலுமிச்சை மாலை அணிவித்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில் ஈரோட்டிலிருந்து சக்தி செல்லும் வழியில் கைகாட்டி பேருந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ளது