அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் திருக்கோயில் சென்னை கொத்தவால் சாவடி ஆச்சாரப்பன் தெருவில் அமைந்துள்ளது. முன்னூறு ஆண்டுகளுக்கு முன்னாள் கட்டப்பெற்றதாக தெரிய வருகிறது.உடையவர் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ராமானுஜர் அவதரித்த ஸ்ரீ பெரும்புத்தூரில் நடைபெறும் அனைத்து உத்சவங்களும் இத்திருக்கோயிலில் நடைபெறுகிறது.