பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள வேலூர் மாநகரில் சான்றோர்கள் நிறைந்த தொண்டை நன்னாட்டில் கரும்பு தோட்டங்கள் நிறைந்த தோட்டப்பாளையம் பகுதியில் அருணகிரிநாதர் பாடிய வேலூர் திருப்புகழ் பாடல்பெற்ற ஆறுமுகர் வாழும் இடமாக அமைந்துள்ள அருகந்தம்பூண்டி என்ற பகுதியில் தாரகேஸ்வரர் என்ற பெயரில் கோயில் கொண்டுள்ளார். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் இவ்வாலய அர்ச்சகரின் பட்டனர் யாத்திரையாக காசி சென்றபோது அங்குள்ள கங்கை நதியிலிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வந்து பூஜை அறையில் ...