இத்திருக்கோயிலில் ஒருகால பூஜை திட்டம் நடைமுறையில் உள்ளது.இத்திருக்கோயிலில் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மகாபாரதம் சொற்பொழிவு 90- நாட்கள் நடந்து, 10- நாட்கள் மகாபாரத நாடகம் நடத்தி. 10-ம் நாள் காலை துரியோதனன் படுகளம் சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் தீமிதி விழா நடைபெறும். அவ்வமயம் சமயத்தார்கள் தோட்டப்பாளையம் வாசிகள், கஸ்பா வாசிகள், சின்ன அல்லாபுரம் வாசிகள், காகிதப்பட்டறைவாசிகள், சத்துவாச்சாரி வாசிகள், சேண்பாக்கம் வாசிகள் தாரை, தப்பட்டை, மேள வாத்தியங்கள் முழுங்க போத்ராஜாவுடன் சிலையை கொண்டு வந்து தீமிதி விழாவில் கலந்து கொள்வார்கள், இவ்விழா சிறப்புடன் நடைபெறுகிறது. நவராத்திரி விழா வேகு சிறப்பாக 10- நாட்களுக்கு நடைபெறும்.சித்திரா பொர்ணமி அன்று இரவு திரௌபதி அம்மன் பூப்பல்லக்கில் எடுத்துச் செல்லப்பட்டு திருவீதி...