தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டது. அவற்றில் அருள்மிகு வசிஸ்டேஷ்வரர் திருக்கோயிலும் ஒன்று. இது சோழர் காலத்துக் கோயிலாகும். தஞ்சை நகர் பகுதியில் அமைந்துள்ளது. தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இது திருநாவூக்கரசர் பாடிய வைப்புத் தலமாகும்.