தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டது. அதில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலும் ஒன்றாகும். இது தஞ்சாவூர் நகர் கருந்திட்டைகுடியில் அமையப்பெற்றதுள்ளது. திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் ஆவணி மூல உத்சவமும், மீனாட்சி திருக்கல்யாணமும் பிட்டுக்கு மண் சுமத்தல் என்ற நிகழ்ச்சியும் நடைபெறும். நித்தியபடி நான்கு கால பூஜை நடைபெறுகிறது.
| 06:30 AM IST - 12:00 PM IST | |
| 12:00 PM IST - 04:30 PM IST | |
| 04:30 PM IST - 08:00 PM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, முதல் கால பூஜை 6.45 க்கு நடைபெறும். உச்சி கால பூஜை நண்பகல் 12.00 மணிக்கு நடத்தப்பட்டு தொடர்ந்து நடை சாத்தப்படும். மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மாலை பூஜை நடைபெறும். இரவு 7.30 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடைபெற்று நடை சாத்தப்படுகிறது. | |