தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டதாகும். அவற்றுள் அருள்மிகு ஆனந்த வல்லியம்மன் திருக்கோயிலும் ஒன்றாகும். இத்திருக்கோயில் தஞ்சை புரீஸ்வரர் எனவும் அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் நகர் கரந்தையை அடுத்த வெண்ணாற்றங்கரையில் கரந்தையை அடுத்து இத்தேவஸ்தானத்தைச் சேர்ந்த மற்றுமொரு திருக்கோயிலாகிய அருள்மிகு மேலசிங்கப் பெருமாள் திருக்கோயில் எதிரில் அமையப்பெற்றுள்ளது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது.
| 06:30 AM IST - 12:30 PM IST | |
| 04:29 AM IST - 08:30 AM IST | |
| 12:30 PM IST - 04:30 AM IST | |
| காலை 6.30 மணிக்கு நடை திறப்பு காலை 9.00 மணிக்கு முதல் கால பூஜை நண்பகல் 11.30 மணிக்கு இரண்டாம் கால பூஜை நண்பகல் 12.30 மணிக்கு நடை சாத்துதல் மாலை 4.30 மணிக்கு மீண்டும் நடை திறப்பு மாலை 6.30 மணிக்கு மூன்றாம் கால பூஜை இரவு 8.00 மணிக்கு நான்காம் கால பூஜை இரவு 8.30 மணிக்கு நடை சாத்துதல் | |