தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் 88 திருக்கோயில்களைக் கொண்டது. இதில் அருள்மிகு நர்த்தன விநாயகர் திருக்கோயிலும் ஒன்றாகும். கும்பகோணம் – மயிலாடுதுறை சாலையில் திருவிடைமருத தாலுக்கா காவல் நிலையம் அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. சைவ ஆகம முறைப்படி ஒரு கால பூஜை நடைபெறுகிறது.