அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் விளங்குளம் தஞ்சாவூரை ஆண்ட சோழ மன்னர்களில் இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில் மிகச் சிறப்புடையதாக போற்றப்படுகிறது. விளங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அட்சயபுரீஸ்வரர் ஆலயமும் சோழ கால பாணியிலேயே அமைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆலயத்தை நிர்மாணித்தவரும் சோழ மன்னர்களின் சம காலத்தில் வாழ்ந்தவராக கருதப்படுகிறது. சேது ரஸ்தா எனப்படும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் புதுக்கோட்டை அறந்தாங்கி வழியாக கட்டுமாவடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையிலிருந்து தெற்கே 30 கி.மீ. தொலைவிலும், பேராவூரணியிலிருந்து தென்கிழக்கில் 15 கி.மீ. தொலைவிலும் விளங்குளம் கிராமம் அமைந்துள்ளது. அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் பூவுலகில் சிவபெருமான் மூன்று நிலைகளில் அமைந்து அருள்பாலிக்கிறார் . ஆவுடையார்கோவில் என்று வழங்கப்படும் திருப்பெருந்துறையில் அரூபமாக ஆத்மநாதராக அருள்பாலிக்கிறார் . சிவாலயங்களில் லிங்கவடிவில் அருவுருவமாகவும் அருள் பாலிக்கிறார் . தில்லையம்பதியெனும் சிதம்பரம் என்ற ஊரில் நடராஜப் பெருமானாக...