தஞ்சாவூர் நாகப்பட்டினம் நெடுஞ்சாலையில் சாலியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் ஆர்சுத்திப்பட்டு என்னும் கிராமத்தில் வயல்வெளியை ஒட்டி இத்திருக்கோயில் அமைந்து உள்ளது. கண் நோய், அம்மை நோய், தீராத வியாதி நீங்கும் திருத்தலமாக இருப்பதால் அன்னை முத்துமாரியை வணங்கி நம் வாழ்வில் எல்லா வளமும் பெறுவோம். இறைவி பெயர் முத்து மாரியம்மன் இத்திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் 18.05.1997 அன்று நடைபெற்றது. தற்பொழுது, திருப்பணி அங்கீகாரம் பெறப்பட்டு வேலைகள் துவங்கப்படவுள்ளது. ஆவணி கடைசி ஞாயிறு திருவிழா வெகு விமர்சசையாக கொண்டாடப்படுகிறது. இத்திருக்கோயில் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளிலும் பொது மக்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டிருக்கும்.