அருள்மிகு காத்தாயி அம்மன் திருக்கோயில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம் நெல்லித்தோப்பு கிராமத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில் நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான திருக்கோயில் ஆகும் இத்திருக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் பெரும்பாலான பக்தர்கள் வருகை புரிகின்றனர் இத்திருக்கோயிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் கடைசி திங்கள் கிழமை நடைபெறும் ஆடி கழிவு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும் இத்திருக்கோயிலில் உள்ள அம்மனுக்கு கருக்காத்த நாயகி என்ற சிறப்பு பெயரும் உள்ளது இத்திருக்கோயிலை சுற்றியுள்ள உப சன்னதிகள் பெரும்பாலான மக்களின் குலதெய்வ கோயிலாக உள்ளது இத்திருக்கோயில் அய்யனார் பேச்சியம்மன் அருள்மிகு காட்டேரி அம்மன் முனீஸ்வரன் போன்ற பல்வேறு சிறு தெய்வ வழிபாடுகளும் மிகவும் சிறப்புடன் நடைபெற்று வருகிறது