பழைய சிவத்தளமஞ்சரி நூலில் இத்தலத்தின் பெயர் அரியான் பள்ளி என்று குறிக்கப்பட்டுள்ளது. இன்று அப்பெயர் மாறி திருப்பள்ளி முக்கூடல் என்றே வழங்கப்படுகிறது. இதனை குருவி ராமேஸ்வரம் என்றும் அழைக்கின்றனர். இறைவன் பெயர் திரிநேத்ரநாத ஸ்வாமி. இறைவி அஞ்சனாட்சி, மைம்மேவு கண்ணி தீர்த்தம் - முக்கூடல்தீர்த்தம், கோயில் எதிரில் உள்ளது. இத்திருக்கோயில் அப்பரால் பாடல் பெற்றது. ஜடாயு இறைவனை நோக்கித் தவம் செய்து, தனக்கு இறுதி எப்போது என்று கேட்க இறைவன் அவரைப் பார்த்து இராவணன் சீதையை எடுத்து வரும் நேரத்தில் நீ தடுப்பாய் அப்போது அவன் உள் சிறகுகளை வெட்ட நீ வீழ்ந்து இறப்பாய் என்றாராம். அது கேட்ட ஜடாயு பெருமானே அப்படியானால் நான் காசி, கங்கை, இராமேஸ்வரம் , சேது...