எம்பெருமான், ஏகநாயகன் திருவாரூர் தியாகேசனின் லீலைகள் 365 என்பர். தன்னைச்சரணைந்தார்க்கு தன்னையே தந்தருளும் எல்லையிலாப்பரம்பொருள் சுந்தரருக்காக பரவைநாச்சியாரின் இல்லத்திற்கு தியாகேசத்திருவுருவம் தாங்கி மஹாவிஷ்ணு காணமுடியாத தனது திருப்பாதங்களை , பிரம்மாவால் காணமுடியாத சிரசினையும் பரவை நாச்சியாரின் இல்லம் தரிசிக்கும் வண்ணம் தனது அடியாருக்காக தூதுபோனதால் ஆண்டுதோறும் சுந்தரருக்கு விழாவும் அருள்மிகு தியாகராஜஸ்வாமி திருக்கோயிலில் பங்குனி உற்சவ பெருவிழா பெரிய கொடியேற்றத்திற்கு முதல் நாள் குண்டையூரிலிருந்து இறைவன் வழங்கிய நெல்லை அருள்மிகு பரவை நாச்சியார் திருக்கோயிலுக்கு பூதங்கள் கொண்டு வரும் நிகழ்ச்சியும் இன்றளவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அடிமுடிநேடிய திருவீதி எனவும் திருவரூர் அழைக்கப்படுகிறது. பரவை நாச்சியார் பிறந்த இல்லமே தற்போது அருள்மிகு பரவை நாச்சியர் திருக்கோயில் என அழைக்கப்படுகிறது. திருவாரூர் திருத்தலத்தில் தான் ஒரு நாயன்மார்...