இராஜமன்னார்குடியில் எழிலோடு கம்பீரமாக அமைந்திருக்கும் இத்திருக்கோயில் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கி.பி.1072-கி.பி. 1122 கட்டப்பெற்ற வைணவத் திருக்கோயிலாகும். ஸ்ரீ மணவாள மாமுனிகளால் அபிமானிக்கப்பட்ட ஸ்தலமாகும். பாஞ்சாத்திர ஆகமம் படி பூஜை முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் போன்று இத்திருக்கோயிலில் 12 மாதமும் திருவிழாக்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பங்குனி மாதம் நடைபெறும் 18 நாட்கள் பிரும்மோற்சவம் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த பெரிய உற்சவமாக...