தல வரலாறு கங்கை எனும் கடும் புனலைக் கரந்தன் தன்னைக் காமரு பூம்பொழியில் கச்சிக் கம்பன்தன்னை அங்கையினில் மான்மறி ஒன்று எந்தினானை ஐயாறு மேயானை ஆரூரனைப் பங்கமிலா அடியார்க்குப் பரிந்தான் தன்னைப் பரிதிநியமத்தானைப் பாசூரானைச் சங்கரனைத் தலையலங்காடன்தன்னைச் சாராதே சால நாள் போக்கினேனே. திருச்சிற்றம்பலம் - திருநாவுக்கரசு நாயனார் தேவாரம் தலத்தின் பெருமை ஆலங்காடு எனப்படும் தலங்களுள் இது முதன்மையானது எனக் கருதுவர் . இதனை . முகவடாரண்யம் என்று வடமொழியில் கூறுவர். தலையாலங்காடு என்ற பெயரை வைத்துப் பார்க்கும்பொழுது , இந்த பகுதி முன்ப ஆலமரக் காடுகளால் சூழப்பட்டதாக இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். தற்போதும் கூட ஆலயத்தின் அருகில் மிகவும் பழமைவாய்ந்த ஆலமரம் ஒன்று காணப்படுகிறது புராண வரலாறு தமது...