ஊரின் கிழக்குப் பகுதியில் இச்சிவன் கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது கோயில் சிறியதாயினும் கருவறை முகம் மண்டபம் மகா மண்டபம் நாழிகை தோரண வாயில் திருச்சிற்று ஆகிய அங்கங்களுடன் அமைந்துள்ளது திருச்சுற்றில் விநாயகர் முருகன் சனி பகவான் பைரவர் ஆகிய பரிவார தெய்வங்கள் தனி கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன சுவாமி யின் கருவறைக்கு நீர் வடக்கே திருச்சுற்ற இடத்தில் அம்பிகையின் திருக்கோயில் உள்ளது இறைவனின் பெயர் தான்தோன்றீஸ்வரர் இறைவியின் பெயர் உலகநாயகி அம்மை பளிச்சிடும் மேனியுடன் அமைந்த சிவலிங்கம் பார்ப்பவர் உள்ளத்தை கவர்ந்து பாவங்களை எல்லாம் போக்கும் சக்தி வாய்ந்தது நின்ற திருக்கோளத்துடன் எழுந்தருளியுள்ள உலகநாயகி அம்மையின் அழகும் திருமுகமும் அருள் மொழியும் திரு நோக்கும் கண்கொள்ளாக் காட்சியாகும் விக்கிரம சோழன் காலத்தில் கட்டப்பட்டதாக...