நாகப்பட்டினம் மாவட்டம்,வேதாரண்யம் வட்டம், வங்க கடலோரம் திருமறைக்காடு எனும் வேதாரண்யம் சமய குரவர்களால் பாடல் பெற்ற அருள்மிகு வேதாரண்ய சுவாமி திருக்கோயிலுக்கு வடக்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் கள்ளிமேடு கிராமத்தில் அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் அடப்பாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. இத்தலம் ஏன்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம் ஆகும், குழந்தை பாக்கியம், திருமண தடை, நோய் நீக்கம், தொழில் பெருக மற்றும் அனைத்து நன்மைகளும் பெற பிரசித்தி பெற்ற தலமாகும். மேலும் குழந்தைகள் பரிகார தளமாகவும் விளங்குகிறது