காஞ்சிபுரம் நகரில் பிரதான சாலையில் அமைத்துள்ள கச்சபேசம் எனப்படும் கச்சபேஸ்வரர் திருக்கோயிலாகும் . வடக்கு நோக்கிய ஏழு நிலைகொண்ட ராஜகோபுரம் ஒரே மதிலுக்குள் இரண்டு சிவாலயங்கள் உள்ளடங்கிய பெருமையும் காஞ்சி கச்சபேசத்துக்கு உண்டு. கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தமிழில் இயற்றப்பட்ட தண்டியலங்காரம் என்ற இலக்கண நூலில் பாடப்பட்டுள்ளது. இத்திருக்கோயிலில் ஒரே இடத்தில் இரு சிவாலயங்கள் உள்ளன. சூரியன் வழிபட்ட ஸ்தலம். மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் கடைஞாயிறு என்ற விழா நடைபெற்று வருகிறது. அத்தினங்களில் மண்டை விளக்கு ஏற்றி திருக்கோவிலை சுற்றி வர தலைவலி, காதுவலி, காதில் சீழ்வடிதல்,...