காஞ்சிபுரத்தின் தென்பால் சுமார் 25கி.மீ. தொலைவில் செய்யாற்றங்கரை மேல் அமைந்திருக்கும் இளையனார் வேலூர் ஓர் அழகிய கிராமமாகும். இக்கிராமத்தின் நடுவே சிறப்புடன் அமைந்துள்ளது அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். திருக்குமரன் குடிக்கொண்டிருக்கும் இக்கோயில் சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பக்தர்களுக்கு அருள் வழங்கும் முருகன் இக்கோயிலில் அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி என்ற பெயருக்கு ஏற்ப இளமையுடையவராக இனியவராக காட்சி தருகின்றார். இத்தலத்தின் தோற்றத்திற்குக் காரணமாய் அமைந்தது முருகனில் வேலே ஆகும். அதனால் தான் இத்தலத்திற்கு வேலூர் என்று பெயர் தோன்றி மருகன் ஈசனின் இளைய குமாரன் என்பதால் இளையனார் வேலூர் என்ற பெயர் வழங்கலாயிற்று...