இறைவன் மகாவிஷ்ணு நரசிம்மவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை அழித்து பிரகலாதனை காத்து அருளினார். அந்த பிரகலாதன் வழியில்வந்த மகாபலி சக்ரவர்த்தி அறத்தின் வழி நடக்காது ஆட்சி செய்தமையால் அவனை அழிக்க மகாவிஷ்ணு மேற்கொண்ட திரு அவதாரம் திரிவிக்ரம அவதாரம் மகாவிஷ்ணு வாமனனாக வடுரூபத்தில் வந்து மகாபலியிடம் தான் தவம் செய்ய விரும்புவதால் தனக்கென தன் காலால் 3 அடி இடம்கேட்க, மகாபலியும் கொடுக்க நீரேற்று (தாரைவார்த்து) தானம் பெற்ற மூவடியைதன் சேவடி கொண்டு அளக்க திரிவிக்ரமனாய் விண் முட்ட எழுந்தார். பேருரு கண்டு பிரமிப்படைந்த மகாபலி அரசனின் முன்பாக ஒரடியால் உலகையளந்து, மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து 3வது அடிக்கு இடம் கேட்க அரசன் குனிந்து தலையைக் காட்ட, தம் திருவடியால் தலையை பாதாளத்தில்...