திருக்கோயில் 108 வைணவ திவ்வியதேசங்களில் ஒன்றாகும். ஸ்ரீ திருமங்கை ஆழ்வாரின் துணைவியார் ஸ்ரீ குமுதவல்லி நாச்சியார் அவதாரம் செய்த தலமாகும். இவ்வாலயத்தின் எதிரே அமைந்துள்ள திருவெள்ளக்குளத்தின் கரையில் சுவேதமகாராஜா அவர்கள் அண்ணன் பெருமாள் அருள் பெற தவம் இருந்து சிரஞ்சீவியாக வரம் பெற்றார். ஸ்ரீ குமுதவல்லி நாச்சியார் இத்திருக்குளத்தில் அல்லி மலரில் அவதரித்ததாக தலபுராணம் சிறப்பித்து கூறுகிறது