இந்திரன்தேவர்களுக்குங்த தலைவன், நுரறு யாகங்களைச் செய்து பதவிபெற்றவன். இதனால் அவனுக்குச் சதமகன் என்னும் பெயருண்டு. அவன் இன்பலோகத்துக்குத் தலைவனாய் இருந்தாலும் அவனுக்கும் துன்பங்கள் நேர்வதுண்டு. அத்துன்பங்களைப் போக்கிக் கொள்வதற்குப் பூலோகத்தில் பல தலங்களுக்குச் சென்று வழி பட்டதாக வரலாறுகள் உள்ளன. ஒரு காலத்தில் இந்திரன் குட்டநோயால் பீடிக்கப் பெற்று அந்நோய் நீங்கும்பொருட்டு இத்தலத்துக்கு வந்து வன்னிமரத்தடியில் மகாவிஷ்ணுவைக் குறித்துக் தவம் செய்தான். மகாவிஷ்ணு அவனுக்குப் பிரத்தியட்சமாகத் தோன்றி அந்தணருக்குப் பூசணிக்காய் தானம் செய்தால் குட்டநோய் நீங்கும் எனச்சொல்லி மறைந்தார். அக்காலத்தில் துன்பநிவர்த்திக்காக ,வ்வித தானங்கள் செய்வது வழக்கம். அவ்வாறே இந்திரன் பூசணிக்காய் தானம் செய்யும்போது அதை வாங்க எவரும் வரவில்லை. இந்திரன் வருந்தி நிற்கையில் திருமாலே ஓர் பிராமணனாகத் தோன்றி தானத்தை ஏற்று, அதை அவ்விடத்திரேயே...