காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் வட்டம், கடம்பர் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள இத்தலம் மிகவும் பழமையானதாகும். திருநாவுக்கரசர் பாடிய க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் கடம்மை இளங்கோயில் என்று இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. இது காஞ்சிப்புராணம் 2ம் காண்டம் இருபத்தொண்டளிப் படலத்தில், காஞ்சி மண்டலத்தைச் சூழ்ந்துள்ள இருபது தளிகளுள் குமாரக் கடவுளால் பூஜிக்கப்பட்ட தலம் என்பதனை விடப்பணாதரக் தொங்கலும் கடுக்கையும் விரிகதில் மதிக்கோடும் அடப்பமாலையும், துவன்றிய வேணியார் நடப்பதாம்புய நாண்மலர்ப் பூசனை நகைநுதி அழல்வேற்கை கடப்ப மாலையான் இயற்றினன் அத்தலம் கடம்பையென் நுரையோங்கும் என்னும் பாடலில் கூறப்பட்டுள்ளது. திருஞானசம்பந்தர் தேவாரம் இத்தலத்திற்கு இருந்தது. அது கிடைக்காமல் போயிற்று என்று எண்ணத்தோன்றுகின்றது. காரணம் அருகில் உள்ள திருமாகரல், குரங்களில்முட்டம் போன்றவை அவர் பாடிய தலங்கள். கடம்பர் கோயிலின்மாடவீதி உற்சவங்கள் சம்பந்தப் பிள்ளையார் கோயில்வரை நடப்பது என்ற...