மயிலாடுதுறை - சித்தர்காடு மறையூர்- அசிக்காடு என வரவேண்டும் மயிலாடுதுறையில் இருந்து ஆறு கிமி தூரத்தில் உள்ளது. இறைவனும் இறைவியும் சொக்கட்டான் ஆடியபோது இறைவி பொய்யாக தான் வென்றதாக கூற, திருமாலும் அதற்க்கு துணை நிற்க இருவரையும் இறைவன் சபிக்கிறார், இறைவி பசுவாக மாறி பல தலங்கள் சுற்றி திரிந்து இந்த தலத்திற்கு வந்தபோது இங்குள்ள குளத்தில் நீராடி இறைவனை தனது ஆபரணங்களை மலை போல் குவித்து வைத்து லிங்கமாக உருவாக்கி பூசை செய்தார் அதனால் இறைவனுக்கு சொர்ணகிரீஸ்வரர் என பெயர் அம்பிகைக்கு வாத்சல்யா அம்பிகை என பெயர். கோயிலின் வடக்கில் ஒரு குளம் உள்ளது அதற்க்கு உடையாள் குளம் என பெயர். இவ்வூர் அகில் மரகாடாக இருந்ததால் அகில்காடு என பெயர், தற்போது திரிந்து...