திருக்கோயில்கள் நிறைந்த தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் என்கின்ற ஊர், பஞ்சஷேத்திர தலங்களில் (ஸ்ரீரங்கம், ஆவணியாபுரம், காஞ்சிபுரம், சோளிங்கர், திருப்பதி) ஒன்றாகும். தட்சிண அகோபிலம் என அழைக்கப்படும் இத்திருத்தலத்தில் ஸ்ரீநரசிம்மர், அரங்கநாதர், வரதராஜப்பெருமாள், வெங்கடேசப்பெருமாள், சோளிங்கர் யோக நரசிம்மர் ஆகிய அனைவரும் ஒருங்கே எழுந்தருளியிருப்பதால் இங்கு வந்து தரிசிப்பவர்களுக்கு பஞ்ச திருப்பதிகளுக்கும் சென்று தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தலத்தில் நரசிம்மர், இலட்சுமி, கருடன், மலையின் பாறை கூட சிங்க முகத்தில் காட்சி தருகின்றன. இதன் காரணமாகவே இத்தலம் ஆவணியாபுரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகிறது. ஆவணியாபுரத்தில் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மலை சிம்மாசல பர்வதம் என்று பெயர். இம்மலையின் உருவ அமைப்பு ஒரு சிங்கம், கிழக்கு முகமாக பார்த்துக்கொண்டு...
| 06:00 AM IST - 01:00 PM IST | |
| 03:00 PM IST - 07:00 PM IST | |
| 07:00 PM IST - 07:00 PM IST | |
| நடை திறக்கும் நேரம் / சாத்தும் நேரம் (சனிக்கிழமை மட்டும்) காலை 05:00 மணி முதல் - மதியம் 01.00 மணி வரை மாலை 03.00 மணி முதல் - இரவு 11.00 வரை நடை திறக்கும் நேரம் / சாத்தும் நேரம் (மற்ற நாட்கள்) காலை 06:00 மணி முதல் - மதியம் 01.00 வரை மாலை 03.00 மணி முதல் - இரவு 07.00 வரை | |