தல வரலாறு பல வருடங்களுக்கு முன் ஆதி நவாப் என்பவர் ஓர் ஊரை ஆண்டு வந்தார். ஒரு சமயம் அவர் தீராத வியாதி கண்டு மிகவும் துன்புற்றதாகவும், அவரைக் கவனித்து வந்த வைத்தியர்கள் கைவிட்ட சமயத்தில் அவ்கூர் வழியாக சென்ற மத்வ மதத்தை சார்ந்த யாத்ரிகர் ஒருவர் ஸ்ரீமுஷ்ணத்திற்கு சென்று பூவராகசுவாமியின் தீர்த்தம், துளசி பிரசாதத்துடன் தன் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் நவாப் பற்றி தெரிய வரவே சுவாமி தீர்த்தத்தையும், துளசி பிரசாதத்தையும் கொடுக்க நவாப் பூரண குணமடைந்தாராம். அது முதல் நவாப் பூவராக பெருமாளிடம் பக்தி கொண்டு அவருக்கு தொண்டு புரிய விரும்பி கிழக்கு சமுத்திரம் எனும் இடத்திற்க சுவாமி எழுந்தருளும்பொழுது வழியில் எழுந்தருளியிருப்பதற்கு கிள்ளை தோப்பு...