இறைவன்: அருள்மிகு கைலாசநாதர் இறைவி: அருள்மிகு காமாட்சியம்மன் ஊர்:இளங்கம்பூர், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம் மற்றும் நகர் அருள்மிகு நடராஜர் திருக்கோயிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவிலும் காட்டுமன்னார்கோயிலிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவிலும் கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் சுமார் 5 கி.மீ தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. திருவண்ணாமலையில் குகையில் அமர்ந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் சித்தர் குகை நமச்சிவாயர் சுவாமிகளின் சிஷ்யரும், சிதம்பரம் திருப்பாற்கடல் பகுதியில் ஜீவசமாதியாகி அருள்பாலித்து வரும் சித்தர் குரு நமச்சிவாயர் வழிவந்த சீடரால் இத்திருக்கோயிலுக்கு நில தானம் அளிக்கப்பட்டுள்ளது இத்திருக்கோயிலில் உள்ள கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. இத்திருக்கோயில் இறைவனும் இறைவியும் வேண்டுவோருக்கு வேண்டும் வரம் தந்து அருள்பாலித்து வருகின்றனர். இத்திருக்கோயிலில் சனீஸ்வரர் அருள்மிகு தண்டபானி ஆகிய தெய்வங்களுக்கு தனி...