அருள்மிகு லட்சுமி வினாயகர் திருக்கோயில், காமகோடிநகர், வளசரவாக்கம், சென்னை -87 என்ற முகவரியில் அமைந்துள்ளது. அருள்மிகு லட்சுமி வினாயகர் திருக்கோயில் நுழைவு வாயிலாக ஒரு தளம் மற்றும் சால சிகரம் கொண்ட கோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் வினாயகர் வடக்கு நோக்கி உள்ளார். வினாயகர் சன்னதி விமானம் இரண்டு தளங்கள் மற்றும் நாகர சிகரம் கொண்ட விமானம் ஆகும். மேலும் வினாயகர் சன்னதியின் எதிரே வாகனம் மூசிகம் மற்றும் பலி பீடம் உள்ளது. வினாயகர் சன்னதியின் மேற்குபுறமக ஆஞ்சநேயர், துர்கா லட்சுமி மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர் சன்னதி ஆகியவை அமைந்துள்ளது. மேலும் வினாயகர் சன்னதியின் வடக்கு புறத்தில் தெற்கு நோக்கி அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி உள்ளது. நவகிரக சன்னதியானது...