தத்துவ தமிழ் உலகும் உன்னத நிலையை அடைய அவதரித்த ஞானப் பெரியோர்களில் தன்னிகரற்று விளங்கியவர்தான் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் என வழங்கும் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளாவார்கள். கி.பி. திருத்தேவையெனும் புண்ணியஸ்த் தலமாகிய இராமேஸ்வரத்தில் அவதரித்தவர்தான் நமது சுவாமிகள்.பாம்பன் எனும் புண்ணியபதியில் சைவநெறி சிறக்க சிவாலயப் பணியாற்றி வந்த சிவச்சீலர் சாத்தப்பபிள்ளைக்கும் செங்கமலம் அம்மையாருக்கும் தெய்வத்திருமகனாகத் தோன்றினார். எப்பாவும் தப்பாமே செப்பவல்லவராய் விளங்கிய நமது ஞானாசிரியருக்கு அப்பாவு எனப் பெயரிட்டார்கள் அப்போதே அவர் பெற்றோர்கள். தம்மையொத்த பிள்ளைகளோடு விளையாடுங் காலத்திலேயே ஞானியாகவும் அருள்வாக்குச் சித்தனாகவும். விளங்கும் தன்மை கொண்வராய் இவர் விளங்குவார் எனச்சோதிடர் ஒருவர் கூறியுள்ளார். ...